புத்தகம் படிப்பது இன்று மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.இது மிகவும் வருத்தம் தரகூடிய விஷயமாகும்.இதற்கு நம் பள்ளிகளும் கல்லூரிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.புத்தகம் ஒருவனை பக்குவம் அடைய செய்கிறது.அவனை சிந்திக்க தூண்டுகிறது,கேள்விகள் கேட்க வைக்கிறது மற்றும் மனதை விரிவடைய செய்கிறது.புத்தகம் ஒருவனுக்கு நல்ல வழிகாட்டியாக அமைகிறது.நம் தலைமுறைக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை வித்திட வேண்டும். இதற்கு பள்ளிகளும் கல்லூரிகளும் முக்கிய பங்காற்றவேண்டும்.நம் மாணவ செல்வங்களுக்கு புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகளை எடுத்து கூற வேண்டும்.திருக்குறள்,பாரதியார் பாடல்கள் ,கவிதைகள் மற்றும் நல்ல கட்டுரைகள் நம் கல்வி திட்டத்தில் கட்டாய பாடமாக சேர்க்கப்படவேண்டும்.தமிழ் அணைத்து பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும்.இல்லையென்றால் தமிழ் மொழி இனி மெல்ல நம் தலைமுறையோடு தொலைந்துபோய்விடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment